
நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இடம்பெறும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். தஞ்சை ரயிலடியில் ஓபிஎஸ் அணியினர், அமமுக சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் பேசிய வைத்திலிங்கம், இரட்டை இலை சின்னம் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி இடம் இல்லை என்றால் அகதிகளைப் போல் பழனிசாமி கட்சியினர் சந்திக்கு சந்தி நிற்ப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனும் எந்த கூட்டணியில் இடம் பெறுகின்றனரோ அந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.