கொரோனா காலத்தில் பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வந்தார்கள். இதனால் கொரோனா காலத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் பொது மக்களுக்கு சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறந்த மதி ப்பெண் வழங்கி அரசு பணி வழங்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

அதன்படி கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்பு தற்போது மற்றும் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு இரண்டு வருடங்கள் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் தகுதி தேர்வில் ஐந்து மதிப்பெண் ஊக்க மதிபெண்ணாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.