தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பரவி வரும் ஒரு ‘பகீர்’ தகவல் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு திமுகவில் இணைந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக (MLA) இருக்கும் ஓபிஎஸ், திமுகவில் ஐக்கியமாவதற்கு முன்பாகவே அவரை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைக்க அமைச்சர் செங்கோட்டையன் தூது அனுப்பியதாகவும், ஆனால் அப்போது ஓபிஎஸ் அதற்குச் சம்மதிக்கவில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழலைக் கவனித்து வரும் ஓபிஎஸ், “அன்று செங்கோட்டையன் சொன்ன பேச்சைக் கேட்டிருக்கலாம்” எனத் தனது நெருங்கிய வட்டாரத்தில் மிகுந்த வருத்தத்தோடு புலம்பியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை அன்று அவர் தவெகவில் இணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால், தற்போதைய புதிய தவெக ஆட்சியில் அவருக்குச் சபாநாயகர் (Speaker) பதவியோ அல்லது துணை முதலமைச்சர் (Deputy CM) பதவியோ கிடைத்திருக்க வாய்ப்பிருந்ததாக அரசியல் நோக்கர்கள் விவாதித்து வரும் நிலையில், இந்த விவகாரம் ஆளுங்கூட்டணிக்குள்ளும் தவெக வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.