சென்னையில், மின்சார ரயிலில் பயணம் செய்தபோது விபரீத செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் அபிலாஷ் படுகாயம் அடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதவரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ், தனது நண்பர்களுடன் ரயிலில் பயணிக்கும்போது, ரயிலின் படிக்கட்டு வெளிப்புற கம்பியில் தொங்கியபடி சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, மின் கம்பத்தில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ளது, இது விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வகை ஆபத்தான செயல்களில் ஈடுபடாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
