பெங்களூர், சர்ஜபூர் என்னும் பகுதியில் தம்பதிகள் தங்களுடைய காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் காரை வழிமறித்து ஜன்னலை திறக்கும்படி கூறினார். ஆனால் காரில் இருந்த தம்பதிகள் திறக்காததால் அந்த நபர் கார் மீது கல்லை எறிந்தார்.

இதனால் காரின் முன் கண்ணாடி உடைந்தது. இதனால் பதட்டமடைந்த காரில் இருந்த பெண் பயத்தில் கத்தி கூச்சலிட்டார்.

அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் பெங்களூர் மாநகப் போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் நடந்து வருவதால் பெங்களூர் மாநகர போலீசார் அவசர சிக்கல் 112 என்ற எண் குறியை பயன்படுத்துங்கள் என்று பொது மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களும் இந்த சாலை பகுதியில் பாதுகாப்பு குறைவாக இருப்பதால் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுவதாகவும், இதற்காக தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.