கன்னியாகுமரி தக்கலையில் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வனிகத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பாக தமிழகத்திலே குறைந்த விலையான அடைக்கப்பட்ட தண்ணீர் லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்யும் கோ ஆப் அக்வா விற்பனை நிலையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சட்டப் பேரவையில் அமைச்சர்கள் பதிலளிக்கையில் ஓடி ஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி. அவர் சட்ட ஒழுங்கு குறித்து பேசுகிறார். தேசிய கணக்கீட்டை பார்க்கும்போது தமிழ்நாட்டில் குற்றங்கள் மிகமிக குறைவு. இந்நேரத்தில் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து இருப்பது அரசியல் நாடகம் ஆகும். சட்ட பேரவை நிகழ்வுகளில் பங்கேற்று மக்களுக்கு எதிர்க்கட்சி செய்ய வேண்டியவைகளை செய்யாமல் இருந்ததை மக்களிடம் மறைக்கவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.