குஜராத் மாநிலம் ஓகா நகருக்கும் மதுரைக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேற்கு ரயில்வே சார்பாக குஜராத் மாநிலம் ஓகா – மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் திங்கட்கிழமை ஓகாவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நான்காவது நாளான வெள்ளிக்கிழமைகளில் காலை 11.45 மணிக்கு மதுரை சென்றடையும். அதன் பிறகு மதுரையிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு 1.15 மணிக்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிக்கு ஓகா சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது