பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் பள்ளிகளுக்கு செல்லாமல் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்வதாக புகார் இழந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மாணவர்களின் வருகை குறைந்து வருவதால் மாணவர்களின் வருகையை அதிகரிக்க காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் பயிற்சி நிறுவனங்கள் செயல்படக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி பள்ளி நேரங்களில் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களும் தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கும் நிலையில் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.