
பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, திறமையான ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பிற்காக ஆண்டுக்கு 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு 1000, ஓ பி சி- க்கு 500 மற்றும் பொதுத் பிரிவினர் 500 பேருக்கு உதவி தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த துறைகளில் பட்டப்படிப்பு மேற்கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 18 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ongcscholar.org/#/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்