
கோவையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவர்களை கொலை செய்ய கஞ்சா கும்பல ஆயுதங்களுடன் சுற்றி திரியும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்ஐ ஹச் எஸ் காலனியில் சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் புகார் அளித்த வீரலட்சுமி என்பவருவது குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். மேலும் புகார் அளித்தவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் அந்த கும்பல் ஆயுதங்களுடன் சென்று அப்பகுதியில் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த வீரலட்சுமி குடும்பத்தினர் கோவை மாவட்ட மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.