தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, சிவராஜ்குமார், மோகன் லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது ஒரு ரசிகர் ஓடி வந்து ஐ லவ் யூ தலைவா என்று ரஜினியிடம் கூறியுள்ளார். உடனே ரஜினிகாந்த் ஒழுங்கா போய் வேலையை பாரு என்று ரசிகருக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.