சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியானது  ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில்மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்று, ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக வந்தது.

இதனையடுத்து அவரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் “ஹெரிடேஜ் ஃபுட்ஸ்” என்ற நிறுவன பங்குகள் அபரிமிதமாக மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் அவரது குடும்பம் ரூ.1,225 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.