இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. இயற்கையின் அதிசயங்களில் பல சம்பவங்கள் ஏற்கக்கூடிய ஒன்றுதான். அந்த வகையில் தற்போது ஒட்டகச்சிவிங்கியை சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து வேட்டையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ஒரே ஒரு ஒட்டகச்சிவிங்கி மட்டும் தனியாக நின்ற நிலையில் முதலில் ஒரு சிங்கம் அதன் மேல் ஏறி‌ தாக்க முயன்றது.

ஆனால் தன்னுடைய கழுத்தை ஆட்டி அந்த சிங்கத்தை கீழே தள்ளிவிட்டது ஒட்டகச்சிவிங்கி. அதன் பிறகு சிங்கங்கள் கூட்டமாக வந்து அந்த ஒட்டகச்சிவிங்கியை தாக்கி கீழே தள்ளியது. இதில் ஒட்டகச்சிவிங்கி கீழே சரிந்த நிலையில் மொத்தமாக அனைத்து சிங்கங்களும் அதன் மீது பாய்ந்தது. மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.