தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு சுமார் ₹500 கோடியை லாட்டரி மார்டின் நன்கொடையாக கொடுத்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தகவலை 2019ஆம் ஆண்டு விகடன் செய்தியாக வெளியிட்டது. ஆனால், அது பொய் செய்தி எனவும் அவதூறு எனவும் கூறி திமுக வழக்குத் தொடர்ந்தது. ஆனால், தற்போது மார்டின் 500 கோடி ரூபாய் கொடுத்ததை ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில், மார்ட்டினின் Future Gaming நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அதுவும் EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோதுதான், ₹1,368 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு ₹500 கோடியும், மீதமுள்ள ₹868 கோடி தொகையை பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நிதி கொடுத்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது