அதானி குழுமத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலீடு பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுந்த புகாரில், கௌதம் அதானிக்குச் சம்மன் அனுப்ப அனுமதி கேட்டு அமெரிக்கப் பங்குச் சந்தை ஆணையம் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்தச் செய்தியால் ஆடிப்போன இந்தியப் பங்குச்சந்தை, அதானி குழுமத்தின் பங்குகளை 10% வரை சரித்துவிட்டது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய வீழ்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை!
அதானி குழுமத்தின் இந்தப் பங்குச் சரிவு எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி-க்கு இன்று மட்டும் சுமார் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரச் சந்தையில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. “அதானிக்கு வந்த சோதனை, எல்.ஐ.சி-க்கு வேதனை” எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன
