
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மோரிகான் மாவட்ட சிறையில், 5 விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சைபுதீன், சைருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல், அப்துல் ரஷீத் ஆகியோர், சிறையின் கதவை உடைத்து, போர்வைகள் மற்றும் லுங்கிகளை பயன்படுத்தி சுமார் 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் மீது ஏறி தப்பியுள்ளனர்.
இந்த தப்பிச் சென்றதை அடுத்து, சம்பந்தப்பட்ட சிறையின் ஜெயிலர் பிரசாந்தா சையிகா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிறையில் தற்காலிகமாக 2 துணை ஜெயிலர்கள் கவுகாத்தியில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மேலும், சிறை நிர்வாகம், இந்த தப்பிச் செல்லும் சம்பவத்தைப் பற்றி துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ளது. கைதிகளுடன் இருந்த மற்ற கைதிகள் உட்பட சிறையிலுள்ளோர் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.