நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் டைவ் அடித்து பிடித்த கேட்ச் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி டெவோன் கான்வே (52), டாரில் மிட்செல் (59*) ஆகியோரின் அரைசதத்தால் 20 ஓவர் முடிவில் 176/6 ரன்கள் எடுத்தது.

பின்னர் இன்னிங்ஸில் இலக்கை துரத்திய இந்திய அணி மோசமான தொடக்கத்தை பெற்றது. இந்தியா 15 ரன்களில் 3 முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்தது. இங்கிருந்து சூர்யகுமார் யாதவ் (47), ஹர்திக் பாண்டியா (21) ஆகியோர் இன்னிங்ஸைக் கையாண்டனர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 68 ரன்கள் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் விளாசினாலும் இந்தியாவின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுக்க, கிவி (நியூசிலாந்து) அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே வலுவான தொடக்கத்தைக் கொண்டிருந்தனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச முடிவு செய்தார். ஏனெனில் போட்டியில் பனி விழுந்த பிறகு பந்துவீசுவது கடினமாக இருக்கும். எனவே ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார். ஹர்திக் பாண்டியாவின் முதல் ஓவரிலேயே ஃபில் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் ஆக்ரோஷமாக விளையாடினர். முதல் 2 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தது.

ஃபின் ஆலன் இந்திய அணிக்கு ஆபத்தானவராக இருப்பார் என்று தோன்றியது. அதே சமயம், வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சு அந்த அணிக்கு எதிர்பார்த்த வேலையை செய்தது. 5வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வெற்றி பெற்றார். 5வது ஓவரின்2வது பந்தில் ஆலன் ஆட்டமிழந்தார். சுந்தரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ஆலன் 2வது பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆனார். ஃபின் ஆலன் 23 பந்துகளில் (4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்) 35 ரன்கள் எடுத்தார்.

வாஷிங்டன் சுந்தர் அதே ஓவரில் இந்தியாவுக்கு 2வது விக்கெட்டை எடுத்தார்.. சுந்தர் மார்க் சாப்மேனுக்கு பந்துவீசி  அவரே சிறப்பான கேட்ச் எடுத்தார். சாப்மேன் சுந்தர் பந்தை முன் நோக்கி ஸ்டோக் செய்தார். அப்போது அவர் ஒரு அழகான கேட்ச் ஒன்றை டைவ் அடித்து பிடித்தார். வாஷிங்டன் சுந்தர் டைவ் அடித்து பிடித்த கேட்ச் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐந்தாவது ஓவரில் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போது நியூசிலாந்தின் நிலை 43/2. இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் மிகவும் ரன்களை கசிய விட்டார். ஆனால் நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு கேப்டன் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றினார். சுந்தர் 4 ஓவர் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தது மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும்  கடைசியில் 28 பந்துகளில் (5 பவுண்டரி, 3 சிக்ஸர்) 50 ரன்கள் விளாசி அவுட் ஆனார். தொடக்கம் சரியாக இல்லாததால் இந்திய அணி தோல்வியடைந்தது..