‘காக்ரோச் ஜனதா பார்ட்டி சமூக வலைதளப்பக்கத்தைப் பின்தொடர்பவர்களில் 94 சதவீதத்தினர் இந்தியர்களே என்று அதன் நிறுவனர் அபிஜீத் டிப்கே ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தப் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலால் இயங்குவதாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக இந்த புள்ளிவிவரங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப் பிரச்சனை, தற்போது அரசியல் ரீதியான விவாதமாக மாறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பா.ஜ.க தலைவர்கள் சி.ஜே.பி-யின் ஆதரவுத் தளம் சந்தேகத்திற்குரியது என்றும், அதன் பெரும்பாலான பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் வாதிடுகின்றனர்.

“>

இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் சி.ஜே.பி-க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக, ஒரு கிண்டலான சமூக வலைதள இயக்கம் எப்படி தேசிய அளவிலான அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது என்பது தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.