
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம் வேங்கனூரில் உபன்யா(18) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உபன்யாவும், சுகின்(23) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த காதலர்கள் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு உபன்யாவின் வீட்டிற்கு வந்தனர். அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லை.
இந்த நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் காதலர்கள் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து கோவில் திருவிழா முடிந்து வீட்டிற்கு வந்த உபன்யாவின் சகோதரர் தனது தங்கையும் காதலரும் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.