தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக ‘விசில்’ சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நேற்று (ஜன. 22) அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, விஜய் ‘விசில்’ சின்னத்தைத் தான் தேர்ந்தெடுப்பார் என்று தாம் ஒரு ஆண்டிற்கு முன்பே கணித்துக் கூறியிருந்ததாகத் தெரிவித்தார்.
“விஜய்க்கு விசில் சின்னம் என்பது நான் கொடுத்த ஐடியாதான்; தை பிறந்ததும் அவருக்குச் சின்னம் பிறந்திருக்கிறது” என்று குறிப்பிட்ட அவர், ‘விசில்’ சின்னம் இளைஞர்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அவர் அரசியலில் அடுத்தகட்டமாகச் சேர வேண்டிய சரியான இடத்திற்கு விரைவில் வழி பிறக்கும் என்றும் கஸ்தூரி மர்மமாகக் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய்யின் ‘விசில் போடு’ பாடல் வரிகளுடன் ஒத்துப்போகும் வகையில் இந்தச் சின்னம் அமைந்துள்ளதால், தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், கஸ்தூரியின் இந்த ‘ஐடியா’ குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
