கேரளாவின் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு ஓட்டுகள் விழுவதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளனர். நான்கு இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்ட தாக கூறப்படுகின்றது. காங்கிரஸின் கைச்சின்னம் மற்ற சின்னங்களை விட சிறியதாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் உடனடியாக அதனை மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.