வியட்னாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தோன் பகுதியில் உள்ள நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஒரு மணி நேரத்திற்குள் தொடர்ந்து ஐந்து முறை ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5 மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கங்களால் லேசான அதிர்வு தான் உணரப்பட்டதே தவிர யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.