வேலை நேரத்திற்கு பின் முதலாளியிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் போன்றவை வருவதால் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை உண்டாகும். அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாது. இந்நிலையில் மேனேஜரிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மசோதா ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வேலையில் பயன்படுத்தும் மொபைலை பணி முடிந்ததும் Switch off செய்துகொள்ளும் சட்டம் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது.