இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினமும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதன்படி twitter-யில் சனோபா என்ற சமீபத்திய பேஷன் செப்பல் ஒரு ஜோடி 4500 ரியால் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. சாதாரண குளியல் அறைக்கு அணியும் செருப்பு இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் இருக்கும் செருப்பை இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ரூபாயில் வாங்கி விடலாம். குவைத்தில் 4500 என கூறப்படுவது இலங்கையில் ரூபாயில் 3.5 லட்சத்திற்கும் மேல் செல்கிறது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் மோசடியின் உச்சம் இதுதான் என்று இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.