தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் வேலுச்சாமிபுரம் விபத்து வழக்கு, இப்போது தவெக தலைவர் விஜய்க்கு நேரடியாகச் சுருக்கை நெருக்கியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் மக்கள் மனதில் ஆறாத வடுவாக உள்ளது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாகத் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடி திருப்பமாக, தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

​வரும் 12-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால், அவர் டெல்லி செல்லத் தயாராகி வருகிறார். ஒருபுறம் ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைத் துறையின் நெருக்கடி, மறுபுறம் சிபிஐ சம்மன் என விஜய்யைச் சுற்றி அரசியல் மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.