தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கிய பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் நெருங்குவதால் நிர்வாகிகளை நியமித்து கட்சியை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கட்சியில் பலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வேறு கட்சியிலிருந்து இணைந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மருது அழகு ராஜ் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக மருது அழகுராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு தலைமையும் ஒரு தலைமுறையும் அரசியலுக்கு வருகிறது. அதுதான் 2026 ஆம் ஆண்டை  தீர்மானிக்க போகிறது என்று பதிவிட்டுள்ளார். இவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக திகழ்ந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவின் முன்னாள் ஆசிரியர் ஆவார். அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஏற்பட்ட பிறகுமுக்கிய நிர்வாகிகள் பலர் விலகியதோடு அவர்கள் மாற்றுக் கட்சியிலும் இணைந்தனர். மேலும் இந்த நிலையில் தற்போது மருது அழகுராஜ் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக வந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

 

777777484