கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே ஒரு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார்கள். இந்நிலையில் சிறுமிக்கு அவருடைய தந்தை வீட்டில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதற்கிடையில் சிறுமிக்கு அவருடைய தந்தை பாலியல் தொல்லை கொடுக்கும்போது வெளியே சென்றிருந்த தாயார் திடீரென வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது தன் கணவரின் செய்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.