பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து கொண்டிருக்கிறது இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருக்கும் அனைத்து அறிவியலிலும் நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 17ஆம் தேதி திருநெல்வேலியை சேர்ந்த அகிலன் என்ற மாணவன் பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தார் அப்போது திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்துவிட்டார்.

அதன் காரணமாக அன்றிலிருந்து இன்று வரை குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நாளை முழுவதும் தென்காசி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட பகுதிகளில் இருக்கும் அருவிகளில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். எனவே பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை குளிக்க அனுமதி வழங்கியுள்ளார். மற்ற அருவிகளில் எப்போதும் போல குளிக்கலாம்.