மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவடைந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், “நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர், பிரதமராக வருவார்” என்றார்.