உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தினசரி வீட்டு வேலைகளின் சுமையைக் குறைக்க நினைத்த பெண் ஒருவர், ஆன்லைனில் ‘டிஷ்வாஷர்’ இயந்திரத்தை ஆர்டர் செய்துள்ளார். இயந்திரம் வீட்டிற்கு வந்ததைக் கண்ட அவரது கணவன் ஆத்திரமடைந்து, மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பணத்தை வீணடிப்பதாகக் கூறி ஆவேசமடைந்த அவர், மனைவியை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வெறும் ஒரு இயந்திரத்திற்காக மனைவியைப் பழிவாங்கும் நோக்கில் கணவன் நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
மேலும் குடும்ப வன்முறை எந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தப்பியோடிய கணவனைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
