
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மார்ச் மாதம் முதல் சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் முதல் வாரத்தில் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுனா செய்து வருகிறாராம். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி என்றும் கூட்டணி தொடர்பாக விஜய் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்று வரும் செய்தியில் எந்த உண்மையையும் கிடையாது என்றும் அக்கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் பனையூர் அலுவலகத்தில் மட்டுமே அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில் தற்போது தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக இறங்கி பொதுமக்களை சந்திக்க இருக்கிறார்.
அவருடைய சுற்றுப்பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.