
பதினெட்டாவது ஐபிஎல் திருவிழாவானது இந்தியாவின் பல நகரங்களிலும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே மும்பை வீழ்த்தியது. இதனை அடுத்து இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியோடு வருகிற 28ஆம் தேதி மோத இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பை கடந்த சீசனில் ருதுராஜிடம் ஒப்படைத்து சாதாரண விக்கெட் கீப்பர் விளையாடுகிறார். கடந்த சீசனோடு ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறிய நிலையில் தற்போது அவர் இன்னும் விளையாடி வருவது மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சென்னையின் கேப்டனாக ருத்ராஜை தேர்வு செய்தது ஏன்? அவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தோனி சமீபத்தில் முதலில் கேப்டனுடைய தனிப்பட்ட பார்ம் முக்கியம் அதன்பிறகு தான் கேப்டன்சி என்று பல கருத்துக்களை கூறியிருந்தார். இதனையடுத்து ரோஹித் சர்மாவை தோனி மறைமுகமாக விமர்சித்துள்ளதாக விவாதங்கள் எழுந்தது. ஏனெனில் சமீப காலமாகவே டெஸ்ட் கிரிக்கெட் மோசமான பார்மில் இருந்த ரோஹித் சர்மா இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார் .
இதனை குறித்து தான் தோனி பேசி இருக்கிறார் என்று விவாதம் எழுந்தது. இருப்பினும் கடந்த ஐசிசி சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார் ரோஹித் . இந்திய அணிக்கு கோப்பையும் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.