பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இவர்கள் பகல் நேரங்களில் சாதாரண மனிதர்களைப் போலவே நடமாடுகிறார்கள், விளையாடுகிறார்கள். ஆனால் சூரியன் மறைந்தவுடன், இவர்களது உடல் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் விசித்திரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.  இவர்களது உடல் இறுக்கமடைந்து, கைகள் மற்றும் கால்களின் விரல்கள் பல்லியைப் போலவே வளைந்து கொள்கின்றன.

இந்த விநோதமான நிலையைக் கண்டு அந்த கிராமமே அச்சத்தில் உறைந்துள்ளது. உள்ளூர் மக்கள் இவர்களைப் பல்லி மனிதர்கள் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மர்மமான பாதிப்பு குறித்துப் பல உயர்மட்ட மருத்துவக் குழுக்கள் ஆய்வு செய்தும், இதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. எனவும் இது ஒரு அரிய வகை மரபணு நோயாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் சூரிய ஒளியில் இருக்கும்போது இவர்களது நரம்பு மண்டலம் சாதாரணமாகச் செயல்படுவதும், இருள் சூழ்ந்தவுடன் தசைகள் செயலிழப்பதும் அறிவியலுக்குப் பெரும் சவாலாக உள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள பலருக்கு இது போன்ற பாதிப்பு இருப்பது இதுவே முதல்முறை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த குடும்பத்தின் மர்மத்தை விடுவிக்கப் பல சர்வதேச மருத்துவ நிறுவனங்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன.