கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள் இருவரும் தோழர்கள் என்பதால் நட்பாக பழகி வந்துள்ளனர். இதற்கிடையில் அஞ்சலி ஒரு வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்ட நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டிற்கு மீண்டும் திரும்பி உள்ளார். அப்போது அஞ்சலியை விஷ்வா, மைசூருக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் அங்கு வர மறுத்துள்ளார்‌.

இந்நிலையில் விஷ்வா தன்னுடைய காதலை அஞ்சலியிடம் கூறிய நிலையில் அவர் அதை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்வா என் காதலை ஏற்கவில்லை என்றால் நேகா நிலைமைதான்உனக்கும் வரும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் விஷ்வாவுடன் பேசுவதை அஞ்சலி நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் விஷ்வா நேற்று காலை அஞ்சலியை வீடு புகுந்து ஓட ஓட விரட்டி சர மரியாக குத்தி கொலை செய்தார். இதைப் பார்த்த அவருடைய பாட்டியும் சகோதரிகளும் கதறி அழுதனர். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர்‌ அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தலைமறைமாக உள்ள விஷ்வாவை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் கடந்த மாதம் 28ஆம் தேதி கர்நாடக மாநிலம் உப்பள்ளி பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் வைத்து பயாஸ் என்ற மாணவர் தன்னை காதலிக்க மறுத்த நேகா என்ற பெண்ணை கொடூரமாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்  தற்போது ஒரு தலை காதலால் மற்றொரு பெண்ணும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.