சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே தேர்தல் முடிவு வெளியான நிலையில், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று 30 கோடி ரூபாய் வரை பந்தயம் கட்டியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜக்கவரபு வேணுகோபால ரெட்டி(52) தன்னுடைய கிராமத்தை சுற்றி உள்ளவர்களிடம் 30 கோடி ரூபாய் வரை பந்தயம் கட்டியுள்ளார். இந்த நிலையில் தேர்தல் முடிவு வெளியான போது கட்சி படுதோல்வி அடைந்ததால் அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் தலைமுறை வாங்கினார். அவரிடம் பந்தயம் கட்டிய நபர்கள் அவரது வீட்டை சூறையாடினர். இதனால் மணமுடைந்த வேணுகோபால ரெட்டி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.