சென்னையில் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் பேசினார். அப்போது மத்திய அரசு என்று குறிப்பிடாமல் “ஒன்றிய அரசு” என்று கபேசினார். ஒன்றிய அரசு என்பது மாநிலங்களுடைய ஒன்றியம் என்பதை குறிக்கும் விதமாக திமுக அந்த வார்த்தையை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது விஜய் அதே வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் திருச்சியில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என விஜய் குறிப்பிட்டுள்ளார். 2021ம் ஆண்டுக்கு முன் வரை “மத்திய அரசு” என்று தான் எல்லோரும் சொல்லி வந்தனர். விஜய் திமுக சார்ந்த அரசியலை முன்னெடுப்பது போல் தெரிகிறது. விஜய் திமுக ஆதரவு அரசியலை முன்னெடுப்பது பாஜகவின் வளர்சிக்கு உதவும் என்று கூறியுள்ளார்.