பிரான்சில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலையைச் சமாளிக்க, அந்நாட்டு மக்கள் லீடில் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் ஏர் கண்டிஷனர்களை வாங்குவதற்கு அலைமோதி வருகின்றனர். வரவிருக்கும் மூன்றாவது வெப்ப அலையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, மலிவு விலையிலான ஏசிகளின் இருப்பு தீருவதற்குள் மக்கள் முண்டியடித்து வாங்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் ‘கான்செர்ட் டிக்கெட்’ வாங்குவதைப் போலவும், கொரோனா பெருந்தொற்று கால பீதி கொள்முதல் போலவும் மக்கள் ஏசிகளை அள்ளிச் செல்லும் இந்த வெறித்தனம், இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியதோடு பல நகைச்சுவையான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
🔥🚨LATEST: The French have been reportedly panic buying air conditioners to defend theirselves against the third heatwave coming this weekend. Multiple stores became chaotic as customers raced to secure an ac. pic.twitter.com/e4idZgjdiA
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) July 4, 2026
“>
இதைக் கண்ட நெட்டிசன்கள், “ஏசி வாங்கவில்லை என்றால் இறந்துவிடுவோம் என்று நினைத்துவிட்டார்களா?” என வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். பிரான்சில் உள்ள வீடுகளில் வெறும் 25% மட்டுமே ஏசி வசதி உள்ளதால், மாறிவரும் பருவநிலைக்கு ஏற்ப ஏசி என்பது ஆடம்பரம் தாண்டி தற்போது அத்தியாவசிய தேவையாக மாறி வருவதை இந்த நிகழ்வு காட்டுகிறது.
அதே வேளையில், இந்த ஏசி வாங்கும் பரபரப்பு இணையத்தில் பருவநிலை மாற்றம், குடியேற்றம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் உள்கட்டமைப்புத் தயார்நிலை குறித்த பல தீவிரமான விவாதங்களையும் சமூக வலைத்தளங்களில் வித்திட்டுள்ளது.
