தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறக்கப்படும் நிலையில் 45 நாட்கள் வரை நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றுள்ளார். அவர் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்காக பட்டு வேஷ்டி சட்டையில் சென்றுள்ள நிலையில் சேலத்தில் ரோடு ஷோ சென்றபடியே அவர் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
அவரை பார்க்க வழிநெடுக்கிலும் ஏராளமான பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தீராத ஆர்வத்தின் காரணமாக ரசிகர் ஒருவர் ஓடி வந்தார். அப்போது பாதுகாப்பு பணியாளர் ஒருவர் அவரை தடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக அவர் கீழே விழ பாதுகாப்பு பணியாளரும் தடுமா கீழே விழுந்துவிட்டார். அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | சேலத்தில் முதலமைச்சர் விஜய் வாகனத்தை நோக்கி ஓடிய இளைஞர் கீழே விழுந்தார்.#SunNews | #Salem | #Vijay pic.twitter.com/19aAvgWshx
— Sun News (@sunnewstamil) September 1, 2026
