இந்தியச் சாலைகளில் பயணம் செய்வது என்பது இப்போது ஒரு திகில் திரைப்படத்தைப் பார்ப்பது போலவே ஆகிவிட்டது. சமீபத்தில் வெளியான ஒரு காணொளி நம்மை உறைய வைக்கிறது. அந்த வீடியோவில், ஒரு லாரி சாலையில் சென்று கொண்டிருக்க, அதன் அருகிலேயே ஒரு பொலிரோ (Bolero) எஸ்யூவி வாகனமும் வந்து கொண்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக, அந்த பொலிரோ வாகனம் லாரியை முந்த (Overtake) முயல்கிறது. அந்த நேரத்தில் லாரி எதிர்பாராத விதமாக பொலிரோ மீது மோத, நிலைதடுமாறிய லாரி அப்படியே கவிழ்கிறது.

​மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், லாரி கவிழ்ந்த வேகத்தில் அதில் இருந்த மொத்த சரக்குகளும் அப்படியே அந்த பொலிரோ வாகனத்தின் மீது விழுந்து அதை அமுக்கிவிடுகின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து, சாலைப் பாதுகாப்பில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.