வாழ்க்கையில் வறுமை என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்தும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ஒரு ஏழை கரும்புச் சாறு வியாபாரி சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த நபரைக் கலைக்க முயன்றதோடு, அவரது பிழைப்பு வண்டியையும் கவிழ்க்க முயற்சி செய்தனர்.
இதைக் கண்டு பதறிப்போன அந்த வியாபாரி, “ஐயா, வேண்டாம்.. நான் ஏழை, தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்.. நான் இனிமேல் இங்கு வரமாட்டேன்” என்று கைகூப்பி அழுதுகொண்டே கெஞ்சினார். ஆனால், அவரது கண்ணீரைப் பார்த்தும் துளிகூட இரக்கம் காட்டாத அதிகாரிகள், அந்த வியாபாரியிடம் கடுமையாக நடந்துகொண்ட விதம் காண்போரை ஆத்திரமடையச் செய்துள்ளது.
View this post on Instagram
சட்டத்தை அமல்படுத்துவது முக்கியம் என்றாலும், சக மனிதனிடம் காட்ட வேண்டிய குறைந்தபட்ச கருணை கூட அதிகாரிகளிடம் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
பசியால் உந்தப்பட்டு உழைக்க வந்த ஒரு மனிதனின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் இந்த வீடியோ, நம் சமூகத்தின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
அதிகாரிகளின் இந்த அராஜகச் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
