UPI கட்டணத்தினை எளிமையாக்கப்பட்ட பதிப்பாக சென்ற செப்டம்பர் மாதம் UPI Lite என்ற அம்சமானது அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இந்த UPI Lite அம்சத்தின் வாயிலாக ஐபோன் பயனாளர்கள் UPI பின்னை பதிவுசெய்யாமலேயே பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும். இப்படி UPI Lite வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு UPI வாலட்டில் கட்டாயமாக அதிகபட்சமாக ரூ.2000 வரைக்கும் பணம் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சம் ரூ.200 வரைக்கும் பயன்படுத்தும் படியான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த யுபிஐ லைட் வாயிலாக தினசரி அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகள் வரை செய்துகொள்ள முடியும். இப்போது எப்படி யுபிஐ லைட் அம்சத்தின் வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வது என்பதனை பார்க்கலாம். முதலில் ஐபோன் பயனாளர்கள் paytm செயலியை திறந்து அதன் முகப்பு பக்கத்திலுள்ள UPI Lite என்ற பக்கத்தை கிளிக் செய்யவும். அதன்பின் உங்களது வங்கிக்கணக்கு விபரங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு அதை உறுதிப்படுத்தவும். அடுத்ததாக UPI Lite வாலட்டில் அதிகபட்சம் 2000 வரைக்கும் பணத்தை சேர்த்து பணம் செலுத்துவதற்குரிய UPI விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அதனை தொடர்ந்து கியூஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்து உங்களுக்கான பணப்பரிவர்த்தனைகளை செய்துக்கொள்ளலாம்.