
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய செல்போன்களின் ஆயுளை அதிகரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் சில டிப்ஸ் கொடுத்துள்ளது. அதாவது செல்போனின் ஐஓஎஸ் பதிப்பை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும்.
ஐபோனை எப்போதும் சாதாரண வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் (30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை இருந்தால் பேட்டரி திறன் பாதிக்கும்). போன் கேசை அகற்றிவிட்டு சார்ஜ் செய்யுங்கள். சில நாட்களுக்கு போனை உபயோகிக்க விரும்பாத போது அதனை 50 சதவீதம் சார்ஜில் வைப்பது நல்லது. சார்ஜ் மிகவும் குறைவாக இருந்தால் லோ பவர் மோடை ஆக்டிவேட் செய்யுங்கள்.