கூகுளின் அதிநவீன ப்ரீமியம் ஸ்மார்ட்போனான Google Pixel 10 Pro, தற்போது அமேசான் தளத்தில் அதிரடி விலை குறைப்புடன் விற்பனை செய்யப்படுவது டெக் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுகத்தின் போது ரூ. 1,09,999 என நிர்ணயிக்கப்பட்ட இந்த போன், தற்போது சுமார் ரூ. 13,154 வரை தள்ளுபடி செய்யப்பட்டு வெறும் ரூ. 96,845-க்கு கிடைக்கிறது.
இதனுடன் வங்கிச் சலுகையாக ரூ. 1,500 கூடுதல் தள்ளுபடியும், பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 43,450 வரை விலை குறைப்பும் வழங்கப்படுகிறது. 6.3 இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே, கூகுளின் சக்திவாய்ந்த டென்சர் G5 சிப்செட், 16GB ரேம் மற்றும் 50MP பிரதான கேமரா உள்ளிட்ட அசத்தலான அம்சங்களைக் கொண்ட இந்த போனை, மிகக் குறைந்த விலையில் வாங்க இதுவே சரியான தருணம் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
