18-வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறும் நிலையில் முதல் லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் வரை எடுத்தார். டெல்லி அணியில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதை தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டெல்லி அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 50 ரன்கள் வரை எடுத்தார். மேலும் இந்த போட்டியின் மூலம் டெல்லி அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
