ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்கள் :

2024 ஐபிஎல் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல்லின் 10 அணிகளின் உரிமையாளர்களும்  தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுத்துள்ள வீரர்கள், பட்டியலை அறிவித்துள்ளனர். மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. ஐபிஎல் 2023 ஏலத்தில் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 2023 ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் 16.25 கோடிக்கு வாங்கியது. 2021 ஐபிஎல் ஏலத்தில், கிறிஸ் மோரிஸ் ரூ 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ஐபிஎல் 2023 ஏலத்தில் நிக்கோலஸ் பூரனை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 16 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 2015 ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டார். 2020 ஐபிஎல் ஏலத்தில் பேட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ 15.5 கோடிக்கு வாங்கியது.

2022 ஐபிஎல் ஏலத்தில் இஷான் கிஷானை மும்பை இந்தியன்ஸ் ரூ 15.25 கோடிக்கு வாங்கியது. 2021 ஐபிஎல் ஏலத்தில் கைல் ஜேம்சன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ரூ.15 கோடிக்கு வாங்கப்பட்டார். 2022 ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது.