ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடந்து முடிந்த சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி மற்றும் அதில் விளையாடும் அணிகளின் மதிப்பு போன்றவைகள் குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவில் ஐபிஎல் தொடர் இந்த வருடத்தில் மட்டும் 6.5% வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.35 லட்ச‌ம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில் இந்த சீசனில் மட்டும் 28 ஆயிரம் கோடி அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

இதற்கு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் முக்கிய காரணம் ஆகும். இதில் அணிகளின் மதிப்பு குறித்தும் கணக்கிடப்பட்டு அறிக்கை வெளியான நிலையில் முதலிடத்தை 5 ஒரே சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது. அதன்படி இந்த அணியின் மதிப்பு ரூ.1930 கோடியாக இருக்கிறது. அதன் பிறகு ரூ.1896 கோடி மதிப்புடன் பெங்களூர் அணி 2-வது இடத்திலும், ரூ.1805 கோடி மதிப்புடன் கொல்கத்தா அணி 3-ம் இடத்தையும், ரூ.1805 கோடி மதிப்புடன் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி 4-ம் இடத்திலும், ரூ.1111 கோடி மதிப்புடன் ராஜஸ்தான் அணி 5-ம் இடத்திலும் இருக்கிறது. மேலும் ஹைதராபாத் அணியின் மதிப்பு ரூ.1103 கோடியாக இருக்கிறது.