பீகாரில் உள்ள மொத்த குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் மாதம்தோறும் மாத ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டுவதாக ஜாதி வாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த குடும்பங்களை இலக்காகக் கொண்டு அரசு மூன்று தவணைகளில் பணம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 94 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளன.

இதற்கு லகு உத்யமி யோஜனா திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியான நிலையில் அதற்கான முதல் தவணை தற்போது வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் தொகை மூன்று தவணைகளாக பிரிக்கப்படும். முதல் தவணையில் 50 ஆயிரம் ரூபாய் சுமார் 20 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.