உள்நாட்டு மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. பெஞ்ச்மார்க் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் விகிதங்கள் 10 அடிப்படை புள்ளிகளால் திருத்தப்பட்டுள்ளன. இந்த விகிதம் 8.80 சதவீதத்தில் இருந்து 8.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் என வங்கி தெரிவித்துள்ளது. அதே போல், ஹெச்டிஎஃப்சி வங்கி, உள்நாட்டு, என்ஆர்ஓ மற்றும் என்ஆர்இ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த நிலையான வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களையும் சமீபத்தில் திருத்தியது.