
இளவரசி டயானாவின் பல பொருட்கள் ஏலத்தின் விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது அவர் எழுதிய கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் ஏலத்திற்கு வருகிறது. அதன்படி அவர் தன்னுடைய முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் போன்றவைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதில் டயானா இளவரசர் சார்லஸை திருமணம் செய்த பிறகு எழுதிய கடிதங்களும் அடங்கும்.
இதில் கடந்த 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி எழுதப்பட்ட ஒரு கடிதம் இளவரசர் சார்லஸ் உடன் தேனிலவு பயணத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இதேபோன்று அவர் தாய்மை உணர்வில் பெற்ற மகிழ்ச்சி, கடந்த 1983 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் இருந்து கையசைத்து விடை பெற்ற போது பெற்ற மகிழ்ச்சி போன்ற பல்வேறு விதமான கடிதங்கள் இருக்கிறது. மேலும் இவைகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலத்தில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.