
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வருடம் தோறும் கோடை விழா நடைபெறும்.
இந்த நிலையில் இந்த வருடம் கோடை விழாவானது மே 3 வாரம் தொடங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விழாவின் சிறப்பாக மலர் கண்காட்சி நடத்தப்படும். சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் ஒண்டிக்கரை ரவுண்டானா, பூங்கா சாலை, லேடிஸ் சீட் சாலை, ஏற்காடு, குப்பனூர் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.